பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் பொருளாதார ஆணைக்குழுவின் திருத்தச் சட்டத்தில் சில சரத்துக்கள் அரசியல் யாப்பிற்கு முரண்பட்டதாக அமைந்துள்ளதாக அறிவிக்குமாறு கோரி சமர்பிக்கப்பட்டுள்ள விசேட மனுக்களுக்கு எதிராக சில தரப்பினர் இடைக்கால மனுக்களை சமர்பித்துள்ளனர்.
அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கை பொதுஜன பெரமுனவின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கம், நிதியமைச்சின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உள்ளிட்ட பல தரப்பினர் இந்த மனுவுக்கு எதிராக விடயங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளனர்.
இதற்கமைவாக இடைக்கால மனு தரப்பினர் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகளுக்கு, மனுதாரர்களுக்காக ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள் விடயங்களை முன்வைத்த பின்னர், விடயங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பங்களை வழங்குமாறு பிரதம நீதியரசர் அறிவித்துள்ளார்.
இந்த தரப்பினரின் வாய் மூலமான சமர்ப்பனங்களின் பின்னர் சட்டமா அதிபருக்கு விடயங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment