திருமதி இலங்கை அழகியை தெரிவு செய்வதிலும் அரசியல் தலையீடு என்கிறார் ஹரீன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

திருமதி இலங்கை அழகியை தெரிவு செய்வதிலும் அரசியல் தலையீடு என்கிறார் ஹரீன்

உலகில் முதல் பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு என்ற பெருமையைக் கொண்டு பிரபலமடைந்த இலங்கை இன்று திருமதி உலக அழகி மற்றும் திருமதி இலங்கை அழகிகளால் நகைப்பிற்குள்ளாகும் வகையில் பிரபலமடைந்திருக்கிறது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இந்த சம்பவத்திலும் முழுமையான அரசியல் தலையீடு காணப்படுவதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் பல முக்கிய சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன் மூலம் சுயாதீன பொலிஸ் மற்றும் நீதித்துறை என்பன ஸ்தாபிக்கப்பட்டன. சட்டத்துடன் தொடர்புடைய விடயங்களிலும் ஏனைய விடயங்களிலும் எந்தவொரு அரசியல் தலையீடும் காணப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment