23 கொள்கலன்களில் 300 மில்லியன் ரூபா பொறுமதியான உலர்ந்த பாக்குகள் : பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார் உதவி சுங்க அதிகாரி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

23 கொள்கலன்களில் 300 மில்லியன் ரூபா பொறுமதியான உலர்ந்த பாக்குகள் : பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார் உதவி சுங்க அதிகாரி

(செ.தேன்மொழி)

உலர்ந்த பாக்குகள் அடங்கிய 23 கொள்கலன்களை இந்தோனேசியாவிலிருந்து இந்நாட்டுக்கு எடுத்து வந்து, போலி ஆவணங்களை தயாரித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் உதவி சுங்க அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, இந்தோனேசியாவிலிருந்து கடந்த வருடம் 23 கொள்கலன்களிலிருந்து 300 மில்லியன் ரூபாய் பொறுமதியான உலர்ந்த பாக்குகள் நாட்டுக்கு எடுத்து வரப்பட்டிருந்ததுடன், அந்த பாக்குகளை இந்நாட்டு பாக்குகள் என்னும் போர்வையில் இந்தியாவுக்கு மேல் ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்ந விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் போலி தரவுகளை கணனி மயப்படுத்தியமை தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் உதவி சுங்க அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளனர்.

வாத்துவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சுங்க அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்ட விதகளுக்கு கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குற்றப் புனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment