நெத்தாரிஸ் ஆலோசனைக்குழு ஒரு சட்டம் மற்றும் 4 கட்டளைச் சட்டங்களின் திருத்த வரைபுகளை நீதி அமைச்சிற்கு கையளித்துள்ளது.
சட்ட நடவடிக்கைகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில் நீதியமைச்சின் கீழ் திட்ட வழிநடத்தல் பிரிவொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், நீதியமைச்சின் சட்டத்தரணி ஜி.ஜி.அருள்பிரகாசத்தின் தலைமையில் நெத்தாரிஸ் ஆலோசனைக்குழுவை நியமித்துள்ளது.
மேற்படி குழுவின் உறுப்பினர்கள் நீதியமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், பதிவாளர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அட்டோனி தத்துவப்பத்திர கட்டளைச் சட்டங்கள், நெத்தாரிஸ் கட்டளைச் சட்டம், ஆவணங்களை பதியும் கட்டளைச் சட்டம், இறுதி இருப்பாவண கட்டளைச் சட்டம், நன்றியீனமான காரணத்தினால் கொடுக்கப்பட்ட நன்கொடை உறுதிகளை இரத்துச் செய்வதற்கான 2017 ஆம் ஆண்டு 5 இலக்கச் சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து மேற்படி கட்டமைப்புக்களின் உறுப்பினர்களால் ஆராயப்படும்.
இந்தச் சட்டங்கள் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைக்கு வந்ததுடன் அதன் பின்னர் சில சட்டங்களில் திருத்தங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment