ஆலய பூஜை, வழிகாடுகள் குறித்து இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

ஆலய பூஜை, வழிகாடுகள் குறித்து இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

(எம்.மனோசித்ரா)

ஆலயங்களில் வழமையான பூஜை, தனி நபர் வழிபாடுகள் தவிர்ந்த எவ்வித கூட்டுச் பிரார்த்தனைகளையோ ஒன்று கூடலையோ அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு கூட்டு பிரார்த்தனைகள், திருவிழாக்கள் அல்லது திருமண வைபவம் போன்ற ஒன்று கூடல்களை நடத்தும் தேவை ஏற்படும் போது பிரதேச பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலயங்களில் சுகாதார பாதுகாப்பு மற்றும் தனி நபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து ஆயலயத்திற்குட்பட்ட கட்டடத் தொகுதி மற்றும் திறந்தவெளி உள்ளிட்டவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் தனி நபர் வழிபாட்டிற்கு அனுமதிக்கக் கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சமூக இடைவெளியை பாதுகாத்து 50 தனி நபர் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கூடிய இட வசதி அற்ற ஆலயங்கள் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் தனி நபர் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியும்.

ஆலயங்களில் வழமையான பூஜை, தனி நபர் வழிபாடுகள் தவிர்ந்த எவ்வித கூட்டுச் செயற்பாடுகளையோ ஒன்று கூடலையோ அனுமதிக்கக் கூடாது.

அவ்வாறு கூட்டு பிரார்த்தனைகள், திருவிழாக்கள் அல்லது திருமண வைபவம் போன்ற ஒன்று கூடல்களை நடத்தும் தேவை ஏற்படும் போது பிரதேச பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆலயத்தினுள் எப்போதும் முகக் கவசத்தை அணிதல் வேண்டும். எல்லோருடனும் ஒரு மீற்றர் தூர இடைவெளியை பேணுதல் வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் எல்லா ஆலயங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment