கைது செய்யப்­பட்­டுள்ள கவிஞர் அஹ்னப் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

கைது செய்யப்­பட்­டுள்ள கவிஞர் அஹ்னப் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை

கவிதை நூலொன்று எழுதி வெளி­யிட்­டமை தொடர்பில் கைது செய்யப்­பட்­டுள்ள அஹ்னப் ஜஸீம் எதிர்­கொண்­டுள்ள நிலைமையினை ஆராய்ந்து எதிர்­வரும் 8ஆம் திக­திக்கு முன்பு அறிக்கை­யொன்­றினைச் சமர்ப்­பிக்­கும்­படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்­குழு பயங்­க­ர­வாத விசா­ரணை பிரி­வுக்கு கடிதம் அனுப்பி வைத்­துள்­ளது.

இலங்கை இளம் ஊட­க­வி­ய­லாளர் சங்­கத்­தினால் அஹ்னப் ஜஸீம் தற்­போது எதிர்­நோக்­கி­யி­ருக்கும் நிலைமை தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு அனுப்பி வைத்த முழு விபரங்கள் அடங்­கிய கடி­தத்­தினை அடுத்தே மனித உரிமை ஆணைக்­குழு பயங்­க­ர­வாத விசா­ரணை பிரி­விடம் இக்கோரிக்கையை விடுத்­துள்­ளது.

இளம் ஊட­க­வி­ய­லாளர் சங்கம் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் அவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் சட்­டத்­த­ர­ணிகள் அவரைச் சந்­திப்­ப­தற்கு அனுமதிக்காமை, தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் போது அவரை எலியொன்று கடித்­தமை, அவர் நவ­ரசம் எனும் நூலில் அடிப்படைவாத கருத்­து­களை எழு­தி­யமை என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டாலும் பின்பு வேறு விசா­ர­ணை­களை முன்னெடுக்­கின்­றமை ஆகிய விட­யங்­களை குறிப்­பிட்டு முறையிட்டுள்­ளது.

அவ­ரது கைது தொடர்­பாக இச்­சங்கம் 2020.12.09 ஆம் திக­தியும் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு முறைப்­பா­டொன்­றினைச் செய்துள்ளது. கிடைக்­கப்­ பெற்ற இரண்­டா­வது முறைப்பாட்டினையடுத்து மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் விஷேட குழு­வொன்று அஹ்னப்பின் நிலைமையினைப் பார்வையிடுவதற்கு கடந்த வியாழக்கிழமை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment

Post Bottom Ad