ஜெய்­லா­னியில் 100 அடி உய­ர­மான தாது­கோ­புரம் - அடிக்கல் நடும் நிகழ்வில் அமைச்­சர்கள், ஞான­சார தேரர் உட்­பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு - சவால்­களை எதிர்­கொண்­டுள்­ள முஸ்லிம்களின் வர­லாற்று சான்­றுகள் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

ஜெய்­லா­னியில் 100 அடி உய­ர­மான தாது­கோ­புரம் - அடிக்கல் நடும் நிகழ்வில் அமைச்­சர்கள், ஞான­சார தேரர் உட்­பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு - சவால்­களை எதிர்­கொண்­டுள்­ள முஸ்லிம்களின் வர­லாற்று சான்­றுகள்

வர­லாற்று புகழ் பெற்ற ஜெய்­லானி பள்­ளி­வாசல் அமைந்­துள்ள கூரகல பிர­தே­சத்தில் சுரங்க மலையில் 100 அடி உய­ர­மான தாதுகோபுரம் ஒன்­றினை அமைக்கும் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது.

சுரங்­க­மலை நூற்­றாண்டு கால­மாக ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் பொறுப்பில் அதன் நிர்­வா­கத்தின் கீழ் இருந்து வந்­துள்­ளது. இந்த சுரங்க மலையில் தற்­போது மூன்று புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்­ளன. இந்த மூன்று சிலை­களில் இரண்டு சிலைகள் சுரங்­கத்தின் வளைவில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

சுரங்­க­மலை ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லி­லி­ருந்தும் சுமார் 600 மீட்டர் தூரத்­திலே அமைந்­துள்­ளது. 100 அடி உய­ர­மான தாது­கோ­புரம் நிர்மாணிக்­கப்­ப­டு­வ­தற்­கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி நோன்­மதி தினத்தில் இடம்­பெற்­றது.

அன்று மாலை 4.00 மணிக்கு இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் ஊட­கத்­துறை அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல, தொல்­பொருள் அமைச்சர் விதுர விக்­ரமநாயக்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அகில எல்­லா­வெல, பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர், அர­சாங்க அதிபர் என மற்றும் பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

நெல்­லி­கல சர்­வ­தேச பெளத்த மத்­திய நிலை­யத்தின் தலைமை பிக்கு­வான வத்­துர கும்­புர தம்­மா­ர­தன தேரரின் தலை­மை­யி­லான குழு­வினர் இந்­நி­கழ்­வினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.

கூர­கல பிர­தேசம் பெளத்த வர­லாற்று புகழ்­மிக்­க­தாகும். இப்பிரதேசத்தை பாது­காப்­ப­தற்­கான 100 அடி உய­ர­மான தாதுகோபுரமொன்று நிர்­மா­ணிப்­ப­தற்­கான திட்டம் வகுக்­கப்­பட்­டது என நெல்­லி­கல வத்­து­ர­கும்­புர தம்­மா­ர­தன தேரர் குறிப்­பிட்டார்.

தற்­போது கூர­கல சுரங்­க­ம­லையில் 100 அடி உய­ர­மான தாது­கோ­புர நிர்­மா­ணப்­ப­ணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­கென 2 இலட்சத்து 40 ஆயிரம் கற்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. இதற்­கான அடிக்கல் நடும் நிகழ்வில் சுமார் 30 ஆயி­ரம் பேர் கலந்து கொண்டதாக ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் முகா­மை­யாளர் எம்.எஸ்.எம். ரபி­யுத்தீன் தெரி­வித்தார்.

ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபைத் ­த­லைவர் எம்.எஸ்.எம். நபீஸைத் தொடர்­பு­கொண்­ட­போது, கூர­கல மலையில் 100 அடி உயரமான தாது­கோ­புரம் நிர்­மா­ணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்­ளதை உறு­திப்­ப­டுத்­தினார். இப்­ப­கு­தியை தொல்பொருள் பாது­காப்பு வல­ய­மாக தொல்­பொருள் திணைக்­களம் ஏற்­க­னவே பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. தொல்பொருள் திணைக்களத்தின் மேற்­பார்­வையின் கீழேயே இந்தப் பணிகள் இடம்பெற்று வரு­கின்­றன என்றார்.

ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான பிர­தே­சத்­துக்குள் பல தசாப்­தங்­க­ளுக்கு முன்பும் தாது­கோ­புரம் ஒன்று நிர்­மா­ணிக்கும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த அரசாங்­கத்தில் கல்வி அமைச்­ச­ராக பத­வி ­வ­கித்த பதி­யுதீன் மஹ்மூத் இதற்கு பாரா­ளு­மன்­றத்தில் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அதன் நிர்­மா­ணப்­ப­ணிகள் இடைநிறுத்தப்பட்டது. அர­சாங்கம் நிர்­மா­ணப்­ப­ணிகளை நிறுத்துமாறு உத்­த­ர­விட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் முகா­மை­யா­ள­ராக கடந்த சில தசாப்த கால­மாக பணி­யாற்­றி­வரும் எம்.எஸ்.எம். ரபி­யுத்­தீனை தொடர்பு கொண்டு பேசி­ய­போது அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சலின் திருத்த வேலைகள் மற்றும் நிறப்­பூச்சு வேலைகள் தற்­போது தடை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. கந்­தூரி வைபவம் நடைபெறும் மாதத்தில் மாத்­தி­ரமே இந்த வேலைகள் அனுமதிக்கப்பட்­டி­ருக்­கி­றது. இதற்­காக நாம் தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து அனு­ம­தியைப் பெற்­றுக் ­கொள்ள வேண்டும்.

இங்­குள்ள மரங்­களின் கிளை­களை வெட்­டு­வது கூட எமக்குத் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. என்னால் பள்­ளி­வா­ச­லுக்குள் இரவு வேளையில் தங்­கி­யி­ருக்க முடி­யாது. அதுவும் தடை ­செய்­யப்­பட்­டுள்­ளது. இரவு 8 மணிக்குப் பின்பு எனக்­கென உள்ள தனி­யான அறை­யிலே நான் தங்க ­வேண்டும். இவ்­வாறு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கந்­தூரி வைப­வத்­துக்கு முஸ்­லிம்கள் வருகை தந்­தார்கள். 50 பேர் மாத்தி­ரமே அனு­ம­திக்­கப்­பட்­டார்கள். இவ்­வா­றான கட்­டுப்­பா­டுகள் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளினால் விதிக்­கப்­பட்­டுள்­ளன என்றார்.

மேலும் பள்­ளி­வா­ச­லுக்குள் அமைந்­துள்ள சியா­ரத்தின் மேல் கருங்கல் ஒன்று உய­ரத்­தி­லி­ருந்து வீழ்ந்து பல மாதங்கள் கடந்­து­விட்­ட­போதும் அதனை அப்­பு­றப்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. அதனை அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்கும் தொல்­பொருள் திணைக்­கள அதிகாரிகளின் அனு­ம­தியைப் பெற்­றாக வேண்டும் எனவும் கூறினார்.

ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் நிர்­வா­கத்தை வக்பு சபை 2016 ஆம் ஆண்டு ஒரு புதிய குழு­விடம் ஒப்­ப­டைத்­தது. அதற்கு முன்பு பள்ளிவாசலின் நிர்­வா­கத்தின் தலை­வி­யாக ரொசானா அபு­சா­லியே பதவி வகித்தார். பள்­ளி­வா­சலின் முன்னாள் தலைவி ரொசானா அபுசா­லியை தொடர்­பு­கொண்டு இது தொடர்பில் வின­விய போது ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் தற்­போ­தைய நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துடன் கலந்துரையாட­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

எந்தச் சூழ்­நி­லை­யிலும் பள்­ளி­வாசல் பாது­காக்­கப்­படும். பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட மாட்­டாது என நெல்­லி­ய­கல பன்­ச­லையின் தேரர் உறுதி­ய­ளித்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கூர­கல ஜெய்­லானி பள்­ளி­வாசல் பௌத்த மர­பு­ரி­மைகள் உள்ளடங்கிய தொல்­பொருள் வல­யத்­திலே அமைந்­துள்­ள­தெ­னவும் அப்பள்­ளி­வாசல் அகற்­றப்­பட வேண்டும் எனவும் 2010 - 2015 காலப்பகுதியில் பொது­பல சேனா பல்­வேறு அழுத்­தங்­களைப் பிரயோ­கித்து வந்­தது. ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் மேற்­கொண்டு வந்தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இக்­கா­லப்­ப­கு­தியில் பாது­காப்பு செய­லா­ள­ராக பதவி வகித்த கோத்தா­பய ராஜ­ப­க்ஷவின் உத்­த­ரவின் படி பள்­ள­வா­ச­லுக்குச் சொந்த­மான கடைகள் மற்றும் கட்­டி­டங்கள் அகற்­றப்­பட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் மற்றும் வர­லாற்றுப் புகழ்­மிக்க இடங்­க­ளுக்கு சவால்கள் விடப்­பட்­ட­போ­தெல்லாம் கடந்த காலங்களில் முஸ்லிம் அர­சியல் வாதி­களும் அமைப்­பு­களும் அதற்கெ­தி­ராக குரல் கொடுத்து வந்­தனர். ஆனால் தற்­போது அனைவரும் மௌனித்து விட்­டனர். 

இன்று கூர­கல ஜெய்­லானி பள்ளிவாசல் போன்று தம்­புள்ளை பள்ளிவா­சலும் சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. எமது வர­லாற்று புகழ்­மிக்க சான்­று­களை பாது­காத்துக் கொள்­வது சமூ­கத்தின் பொறுப்­பாகும்.

Vidivelli

No comments:

Post a Comment

Post Bottom Ad