யாழ்ப்பாணத்தில் நண்பர்களுடன் படகு சவாரி சென்ற இளைஞன் பலி - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

யாழ்ப்பாணத்தில் நண்பர்களுடன் படகு சவாரி சென்ற இளைஞன் பலி

நண்பர்களுடன் கடலில் படகு சவாரி செய்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த கெனடி பிரின்ஸரன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

செம்பியன்பற்று கடலில் நண்பர்களுடன் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி சென்றுள்ளார்.

அதன்போது படகில் இருந்து தவறி கடலினுள் விழுந்துள்ளார். அதன்போது படகின் இயந்திரத்தின் விசிறி வெட்டியுள்ளது. அத்துடன் குறித்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

சுழியோடிகள் துணையுடன் சுமார் இரண்டு மணி நேர தேடுதலின் பின்னர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட இளைஞன் மருதங்கேணி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad