யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் இருவர் கைது

கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் கொள்ளையிடப்பட்ட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டலில், யாழ்ப்பாண காவல் நிலைய குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி சி.ஐ.நெவில்பியந்த தலைமையிலான குழுவினரே கொள்ளையிட்ட உபகரணங்களை மீட்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad