பொலன்னறுவை, களுத்துறை மாவட்டங்களில் மேலும் சில பிரிவுகள் முடக்கப்பட்டன! - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

பொலன்னறுவை, களுத்துறை மாவட்டங்களில் மேலும் சில பிரிவுகள் முடக்கப்பட்டன!

பொலன்னறுவை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் பதுரளிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போல்லுன்ன, இங்குரு தலுவ, மிதலன, மோரபிட்டிய, பெலெத்த, ஹெடிகல்ல, மோரபிட்டிய - வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், களுத்துறை - தீனியாவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தீனியாவல கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை - மீகஹதென்ன பொலிஸ் பிரிவில், வலல்லாவிட்ட தெற்கு, மாகலந்தாவ, போதலாவ, கட்டுயகெலே – வெல்மீகொட, பஹல ஹவெஸ்ஸ, மிரிஸ்வத்த மற்றும் பெலவத்த கிழக்கு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தின், எலஹெர பொலிஸ் பிரிவின் சருபிம கிராமசேவர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad