எதிரியுடன் கூட்டுச் சேர்ந்த குற்றத்திற்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் சவூதி அரேபியாவில் மூன்று இராணுவ வீரர்களுக்கு கடந்த சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் உதவி அளித்த எதிரிகள் பற்றிய விபரத்தை சவூதி நிர்வாகம் வெளியிடவில்லை.
சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை மற்றும் யெமன் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான மோதம் உக்கிரம் அடைந்திருக்கும் நிலையிலேயே இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் செல்வாக்கு மிக்க சுன்னி முஸ்லிம் நாடாக இருக்கும் சவூதி மற்றும் பிராந்தியத்தின் பிரதான சியா முஸ்லிம் நாடாக இருக்கும் ஈரானுக்கு இடையே மறைமுகப் போர் இடம்பெற்று வருகிறது. யெமன் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில் இராணுவத்தினர் மீதான மரண தண்டனை விபரம் மறைமுகமாகவே இடம்பெறும் நிலையில் சவூதி நிர்வாகம் அது பற்றி வெளிப்படையாக அறிவித்திருப்பது அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment