(எம்.எம்.சில்வெஸ்டர்)
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு வெளிநாடுகளில் தொழில் புரிந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக தனிமைப்படுத்தல் செயற்திட்டம் நேற்றையதினம் (12) ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி இந்த இலவச தனிமைப்படுத்தல் செயற்திட்டத்தைப் பெறும் முதல் குழு நேற்று இரவு இலங்கைக்கு வந்திருந்தனர்.
இந்த இலவச தனிமைப்படுத்தல் செயற்திட்டத்துக்காக சுற்றுலா ஹோட்டல்களின் 600 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நாடு திரும்பியவர்கள் குவைத்திலிருந்து வருகை தந்த 149 இலங்கையர்கள் வெலிகம பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment