கொரோனா வைரஸ் உருமாறினாலும், அவற்றை எதிர்ப்பதற்கு நாம் தயார், சுகாதார வழிமுறைகளை மீறினால் நாடு மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும் : விசேட வைத்திய நிபுணர் எஸ்.எம். ஆர்னல்ட் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

கொரோனா வைரஸ் உருமாறினாலும், அவற்றை எதிர்ப்பதற்கு நாம் தயார், சுகாதார வழிமுறைகளை மீறினால் நாடு மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும் : விசேட வைத்திய நிபுணர் எஸ்.எம். ஆர்னல்ட்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கொரோனா வைரஸ் உருமாறினாலும், அவற்றை எதிர்ப்பதற்கு நாம் தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் எஸ்.எம். ஆர்னல்ட் இன்றையதினம் சுகாதார பணியத்தி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த 27 ஆம் திகதியன்று 1,111 பேரும், 28 ஆம் திகதியன்று 1,466 பேருமாக 2,577 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். நம் நாட்டில் முன்னெப்போதும் இது போன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை காணப்படவில்லை. 

இதற்கு காரணம் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்திருப்பது ஆகும். இதனை எதிர்ப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். அவர்கள் வீண் பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தத்தமது வீடுகளில் இருந்தாலே போதுமானது.

கொரோனா தொற்றாளர்களின் சிகிச்சைகளுக்காக 82 அவசர சிகிச்சை பிரிவுகளும் , 12,789 கட்டில்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். 

மேலும், எங்களுக்கு ஒட்சிசன் தட்டுப்பாடு இல்லை. சகல ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம். ஆகவே, கொவிட்19 உருமாறினாலும், அவற்றை எதிர்ப்பதற்கு நாம் தயார் நிலையிலேயே இருக்கிறோம்.

பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். இதனை மீறினால் நாடு மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும். ஆகவே, வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும்படி பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad