உயிரிழக்கும் பொலிஸாரை வீடியோ எடுத்தவருக்கு 10 மாத சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

உயிரிழக்கும் பொலிஸாரை வீடியோ எடுத்தவருக்கு 10 மாத சிறைத் தண்டனை

வாகன விபத்தில் உயிரிழந்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை வீடியோ எடுத்து கேலி செய்த ஆடவர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் புசி என்ற அந்த ஆடவர் மீதான பொது ஒழுக்கத்தை மீறியது மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளில் கடந்த மாதம் அவர் குற்றங்காணப்பட்டார்.

42 வயதான அவர் ஏற்கனவே சுமார் 300 நாட்கள் தடுப்புக் காவலில் இருக்கும் நிலையில் ஒரு சில நாட்களில் தமது தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்ய வாய்ப்பு உள்ளது.

அவரது செயல், “இதயமற்ற, கொடிய மற்றும் வெட்ககரமானது” என்று தீர்ப்பளித்த நீதிபதி தெரிவித்தார்.

இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் வழங்கப்பட்டிருக்கும் சிறைக் காலம் பற்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு மெல்போர்னில் வேகமாக காரை செலுத்தியதற்காக நான்கு பொலிஸ் அதிகாரிகள் ரிச்சர்ட் புசியை நிறுத்தினார்கள். அப்போது அந்த நான்கு பொலிஸாரும் லொரி மோதி சம்பவ இடத்தலேயே உயிரிழந்தனர். 

சில மீற்றர் தொலைவில் விபத்தில் இருந்து தப்பிய புசி, தனது கைபேசியை எடுத்து பொலிஸ் அதிகாரிகளை வீடியோ எடுத்ததோடு அந்த வீடியோவில் அவர்களை கேலி செய்துள்ளார்.

No comments:

Post a Comment