சிறைச்சாலைக்கு கைதியை பார்வையிடச் சென்ற பெண் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

சிறைச்சாலைக்கு கைதியை பார்வையிடச் சென்ற பெண் கைது

(செ.தேன்மொழி)

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வந்ததாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரை பார்வையிடுவதற்காக நேற்று மாலை வந்திருந்த பெண்ணொருவரை சோதனைக்குட்படுத்தியுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் அவரிடமிருந்து தடைச் செய்யப்பட்ட பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, குறித்த பெண்ணினால் எடுத்துவரப்பட்ட காற்சட்டை ஒன்றை சோதனைக்குட்படுத்திய அதிகாரிகள், அதில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 4 போதைப் பொருள் பக்கற்றுகளையும், சிம் அட்டை ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, திம்பிரிகஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment