இந்தியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா - ஒரே நாளில் 3,293 பேர் பலி, 362,902 பேருக்கு தொற்று - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

இந்தியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா - ஒரே நாளில் 3,293 பேர் பலி, 362,902 பேருக்கு தொற்று

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3,293 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 201,187 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்சிசன் பற்றாக்குறை, நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக நாளாந்த கொரோனா உயிரிழப்புகள் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை அதிகளவு இடம் பெற்றுள்ளது.

கடந்த ஏழு நாட்களாக இந்தியாவில் நாளாந்தம் 3 இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்களை பதிவு செய்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் புதிதாக மேலும் 362,902 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 17,997,267 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2,979,768 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் செவ்வாயன்று 381 பேர் உயிரிழந்துள்ளார்கள். மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 66,358 ஆக பதிவாகியுள்ளன.

கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு பல நாடு உதவி கரம் நீட்டி வருகின்ற நிலையில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் உச்சம் மே மாத நடுப்பகுதியில் இருக்கலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad