திருகோணமலை - அபயபுர பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை - மட்கோ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.ஹிருசாந்த (21 வயது) எனவும் இவரிடம் 120 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
உப்புவெளி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாவும், கைது செய்யப்பட்ட இளைஞனைத் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை நிருபர் பாருக்
No comments:
Post a Comment