காசல்ரீ நீர்த் தேக்க வனப் பகுதியில் தீ விபத்து - இரண்டு ஏக்கர் காடு எரிந்து நாசம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

காசல்ரீ நீர்த் தேக்க வனப் பகுதியில் தீ விபத்து - இரண்டு ஏக்கர் காடு எரிந்து நாசம்

காசல்ரீ நீர்தேக்க அதி உச்ச பாதுகாப்பு வனப் பகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 02 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காசல்ரீ நீர்த் தேக்கத்திற்ருகிலுள்ள காசல்ரி தொழிற்பயிற்சி நிலைய பகுதியிலுள்ள கருப்பன் தேயிலை மரம் மானாபுல் காட்டுப் பகுதியியே இன்று (04) மதியம் 01 மணியளவில் தீ பற்றியது.

தீ பரவலையடுத்து நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரும் மின்சார சபை ஊழியர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் அதிகளவான கருப்பன் தேயிலை மரக்கன்றுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment