போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் பிறைந்துரைச்சேனையில் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் பிறைந்துரைச்சேனையில் கைது

எஸ்.எம்.எம்.எம்.முர்ஷித்

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 36 மற்றும் 45 வயதுடைய இரு பெண்களை இன்று (04.04.2021) பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து புலனாய்வுப் பிரிவினர் வாழைச்சேனைப் பொலிஸார் மற்றும் சிறுவர் மகளிர் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியின் உதவியுடன் இரு பெண்களையும் மடக்கிப்பிடித்துள்ளனர்.

போதைப் பொருள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் 36 மற்றும் 45 வயதுடையவர்கள் என்றும் பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரிடமிருந்து 500 மில்லி கிராம் ஹெரோயின் 23550 மில்லி கிராம் கேஜி போதைப் பொருள் 60 போதை மாத்திரைகளும் மற்ற பெண்ணிடமிருந்து 17330 மில்லி கிராம் கேஜி போதைப் பொருள் 25 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இவர்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக் காலமாக போதை வியாபாரத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டுவருவதுடன் குறித்த நடவடிக்கையில் காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் வாழைச்சேனை விஷேட அதிரடைப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment