அலி ஸாஹிர் மௌலானாவின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஓட்டமாவடி கொவிட் ஜனாசா மையவாடிக்கு மின் விளக்குகள் அன்பளிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

அலி ஸாஹிர் மௌலானாவின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஓட்டமாவடி கொவிட் ஜனாசா மையவாடிக்கு மின் விளக்குகள் அன்பளிப்பு

H.R ஜனாசா நிதியத்தின் தலைவர் ஹூஸைன் போல்ட் (ஹூஸைன் ரசார்ட்) தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த குழுவினருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஏறாவூர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது ஜனாசா நலன்புரி நிதயத்தின் ஸ்தாபக தலைவர் ஹூஸைன் போல்ட் அவர்களது தலைமையிலான குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளை பாராட்டியதுடன், ஓட்டமாவடி கொவிட் ஜனாசாக்களை அடக்கும் மையவாடியின் மேம்பாட்டு வேலைகளுக்காக பங்களிப்புக்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதன்போது நீண்ட காலமாக ஜனாசா விடயங்களில் தம்மோடு தொடர்புகளை பேணி வருவதுடன் சம காலத்தில் கொவிட் ஜனாசா எரிப்பிற்கு எதிராக ஆரம்பம் முதலே வெளிப்படையாக போராடிய அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கு நலன்புரி அமைப்பு சார்பில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

அத்துடன் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு மாவட்டத்தில் பல சமூக பணிகளை முன்னெடுப்பதாகவும் - முதற்கட்டமாக தங்களது அமைப்பின் சார்பில் மையவாடியை சுற்றி பொருத்துவதற்காக 10 மின் விளக்குகளையும் குறித்த அமைப்பினர் முதற்கட்டமாக அலி ஸாஹிர் மௌலானா அவர்களிடம் வழங்கி வைத்தனர்.

குறித்த தெரு மின் விளக்குகள் ஓட்டமாவடியில் கொவிட் ஜனாசா அடக்கும் கள பணிகளை முன் கொண்டு செல்லும் குழு சார்பில் நியாஸ் ஹாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad