25 வருடங்களின் பின்னர் ஒன்றாக இணைந்த "கல்முனை ஸாஹிரியன்ஸ்" : நினைவாக புதிய டீ-சேர்ட் அறிமுகமும் - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

25 வருடங்களின் பின்னர் ஒன்றாக இணைந்த "கல்முனை ஸாஹிரியன்ஸ்" : நினைவாக புதிய டீ-சேர்ட் அறிமுகமும்

நூருல் ஹுதா உமர்

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதரண தரம் மற்றும் 1996 இல் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் கற்ற மாணவர்களின் சந்திப்பும் புதிய டீ-சேர்ட் அறிமுகமும் இன்று (02) காலை முதல் மாலை வரை முழுநாள் நிகழ்வாக சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலய திறந்தவெளியில் இடம்பெற்றது.

25 வருடங்களின் பின்னர் தன்னுடன் பக்கத்தில் அமர்ந்து உணர்வுகளை பரிமாறிக் கொண்டு கல்வி கற்ற சக மாணவ நண்பனை காண நாட்டின் நாலாப்பக்கங்களிலிருந்தும் நிறைய பேர் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டு தம்முடைய கடந்த கால நினைவுகளை அசைப்போட்டதுடன் நிகழ்கால வாழ்க்கைகளை பற்றியும் கலந்துரையாடினர். 

உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பல இடங்களையும் சேர்ந்த நண்பர்கள் ஒன்றாக கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad