தென் மாகாணத்தில் ஒரு ஹோட்டலில் நடைபெற்ற விழாவின் போது தேசிய அணி வீரர் ஒருவர் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டினை விசாரிக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட், தேசிய அணியில் உள்ள அனைத்து வீரர்களின் சமூக நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், தவறான நடத்தைக்கு ஆளான எந்தவொரு வீரருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டோம் என்றும் கூறியுள்ளது.
வீரர்களின் நடத்தை தொடர்பான புதிய நடத்தை விதிமுறை ஏற்கனவே வெளியிடப்பட்டிருப்பதாகவும், வீரர்களுடனான வரவிருக்கும் வருடாந்திர ஒப்பந்தத்திலிருந்து அதை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் மேலும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment