பிரேசிலில் ஒரே நாளில் 4,249 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

பிரேசிலில் ஒரே நாளில் 4,249 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

பிரேசிலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா வைரஸ் தொற்றினால் நாளாந்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 4,249 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்றினால் பிரேசிலில் 4,195 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், பிரேசிலில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 345,025 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கடந்த 24 மணிநேரத்தில் பிரேலிசில் 86,652 பேர் தொற்றுக்குள்ளாகி இருப்பதுடன், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 13,279,857 ஆக அதிகரித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதலாம் இடத்திலுள்ள அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 3 கோடியே 17 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 560,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள்.

கடந்த ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனம் மார்ச் 11 ஆம் திகதி கொரோனா வைரஸ் பரவலை தொற்றுநோயாக அறிவித்தது.

இதுவரை உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 13 கோடியே 37 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 29 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment