அஸ்ட்ராசெனிகா 2 ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்..! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

அஸ்ட்ராசெனிகா 2 ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்..!

(எம்.மனோசித்ரா)

சுகாதார தரப்பினருக்கு இரண்டாம் கட்டமாக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. அதற்கமைய கொழும்பு 13, கொழும்பு 14 ஆகிய இடங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றன.

நேற்றையதினம் கொழும்பில் 800 சுகாதார தரப்பினருக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் பிரிவின் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.

அத்தோடு முதலாம் கட்டமாக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் கணிப்பிடுவதற்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் இரத்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளையும் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 இலட்சம் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் முன்னிலையில் சுகாதார சேவையில் ஈடுபடுவோருக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment