ஸ்பெயினை அடைந்த தஞ்ச படகில் 17 சடலங்கள் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

ஸ்பெயினை அடைந்த தஞ்ச படகில் 17 சடலங்கள் மீட்பு

ஸ்பெயினின் கனேரி தீவுகளை அடைந்த குடியேறிகள் படகு ஒன்றில் இருந்து செவ்வாய்க்கிழமை 17 சடலங்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டின் அவசர சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதில் உயிர் தப்பி இருந்த இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மூவர் இராணுவ ஹெலி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 

“மூவரும் தாழ் உடல் வெப்பநிலையுடன் காணப்படுகின்றபோதும் மற்றபடி நல்ல உடல்நிலையுடன் இருக்கின்றனர்” என்று அவசர சேவை பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் எல் ஹிரோ தீவில் இருந்து சுமார் 265 கடல் மைல் தூரத்தில் விமானப் படை விமானம் ஒன்று இந்த படகை முதலில் கண்டுள்ளது. 

இந்த படகில் இருக்கும் அனைத்து தஞ்சக்கோரிக்கையாளர்களும் ஆபிரிக்க துணை சஹாரா பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என்று ஸ்பெயினின் கடல்சார் மீட்பு சேவை பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான கடல் பயணத்தை கொண்டபோதும் ஆபிரிக்காவில் இருந்து கனேரி தீவை நோக்கி அட்லாண்டிக் கடலை கடக்க முயற்சிக்கும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad