தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

மாவனெல்லயில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக 21 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை கேகாலை மேல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி மாவனெல்லயில் ஆரம்பித்த வன்முறை செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டும், அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி வண்ணாத்துவில்லு பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம், அதன் பின்னர் காத்தான்குடியில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட வெடிபொருள் பரீட்சார்த்த நடவடிக்கை போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டார்.

மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டக்களப்பில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட 8 குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் 8 குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்து, மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

அத்துடன், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவதிற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராகவும் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment