கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இடமாற்றம் - மேன்முறையீடுகள் இருப்பின் 15 க்கு முன் அனுப்பவும் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இடமாற்றம் - மேன்முறையீடுகள் இருப்பின் 15 க்கு முன் அனுப்பவும்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு 2021ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் இடமாற்றங்கள் கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள ஆசிரியர் இடமாற்ற சபையின் சிபாரிசுக்கமைய பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் இடமாற்றங்கள் எதிர்வரும் 19ம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், ஆசிரியர் இடமாற்றம் 2021 இற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள், இவ் இடமாற்றம் தொடர்பான ஏதேனும் மேன்முறையீடுகள் இருப்பின் அதனை தங்களது அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் சிபாரிசுடன் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவித்துள்ளார். 

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒலுவில் விசேட, பெரியநீலாவணை நிருபர்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad