கனேவல்பொல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் சந்தை - News View

About Us

About Us

Breaking

Monday, April 5, 2021

கனேவல்பொல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் சந்தை

கெக்கிராவ கல்வி வலையத்திற்கு உற்பட்ட அ/கனேவல்பொல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடக குறித்த வகுப்பாசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சந்தை இன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. 

தரம் இரண்டில் கல்வி கற்கும் 57 மாணவர்களும் தங்களது பெற்றோர், பாதுகாவலர்களின் உதவியோடு தனித்தனியான சிறிய கடைகள் அமைத்து குறித்த மாணவர் சந்தையினை அழகுபடுத்தியிருன்தனர்.

பாடசாலை அதிபர் சட்டத்தரணி முஹம்மட் நிசாம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கெக்கிராவ கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவு உதவிப் பணிப்பாளர் KP.அமரவன்ச, ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் MH.சபர்தீன் ஆகியோர் கலந்துகொண்டதோடு கௌரவ அதிதிகளாக மக்கள் வங்கி கனேவல்பொல கிளையின் முகாமையாளர் செவ்வந்தி, மரந்தங்கடவள அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் SM.தவுஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறுவர் சந்தையினை பார்வையிட்ட கெக்கிராவ கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவு உதவிப் பணிப்பாளர் KP.அமரவன்ச ஆரம்பப் பிரிவில் சில வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் பார்வையிட்டு மாணவர்களின் நிலைபற்றியும் வகுப்பாசிரியைகளுடன் கலந்துரையாடினார்.

மாணவர்களுக்கு கல்வியாற்றளோடு மேலதிக திறன்களையும் வளர்த்துக் கொள்வதற்கு உந்துகோளாக அமையும் இதுபோன்ற சிறுவர் சந்தையினை எமது பாடசாலையில் நடத்துவதற்கு உதவிய தரம் இரண்டு வகுப்பாசிரியர்களுக்கும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர் தமது நன்றியினை தெரிவித்திருந்தார்.

ஐ.எம்.மிதுன் கான்
கனேவல்பொல

No comments:

Post a Comment