இந்தியாவில் கொரோனா தாக்கிய 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் சிகிச்சை தேவைப்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

இந்தியாவில் கொரோனா தாக்கிய 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் சிகிச்சை தேவைப்படுகிறது - உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுகிறது. இதிலும் குறைவானவர்களுக்குத்தான் ஒக்சிஜன் அவசியமாகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மோசமாக இருப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜாசரெவிக் கூறியதாவது,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுகிறது. இதிலும் குறைவானவர்களுக்குத்தான் ஒக்சிஜன் அவசியமாகிறது.

ஆனால் தற்போது பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்று பார்த்தால், சரியான தகவல்கள், ஆலோசனைகள் கிடைக்காததின் விளைவாக பலர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைகிறார்கள். (அவர்களுக்கு வீட்டில் இருந்து கொண்டு பராமரித்து, கண்காணித்து வந்தாலே கொரோனாவை பாதுகாப்பாக நிர்வகிக்க முடியும்.)

சமூக அளவிலான மையங்கள் நோயாளிகளை சோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பான வீட்டு பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதே நேரத்தில் ஹொட்லைன் மற்றும் டேஷ்போர்ட்கள் மூலம் தகவல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment