வத்தளை, ஹுனுபிட்டி பகுதியில் 2 கிலோவுக்கும் அதிகம் எடை கொண்ட 'ஐஸ்' போதைப் பொருளுடன் ஒருவர் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப் பொருள் தொடர்பாக வத்தளை பகுதியில் நடந்து வரும் சோதனைகளின் விளைவாக கைது செய்யப்பட்ட 13 ஆவது சந்தேக நபர் இவர் ஆவார்.
கடந்த சனிக்கிழமை 113 கிராம் ஐஸ் மற்றும் 101 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவரும், ஞாயிற்றுக்கிழமை 15 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு சந்தேக நபர்களும் ஜா-எல பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் மேலும் 5 சந்தேக நபர்கள் திங்களன்று சபுகஸ்கந்த பகுதியில் 110 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே தற்சமயம் ஹுனுபிட்டி பகுதியில் 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 10 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தமாக 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது 128 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment