அரசாங்கம் LLRC மற்றும் பரனகம ஆணைக்குழுக்களை நடைமுறைப்படுத்தினால் மனித உரிமைகள் பிரச்சிணைகளிலுருந்து வெளிவரலாம் - ஹர்ஷ டி சில்வா - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

அரசாங்கம் LLRC மற்றும் பரனகம ஆணைக்குழுக்களை நடைமுறைப்படுத்தினால் மனித உரிமைகள் பிரச்சிணைகளிலுருந்து வெளிவரலாம் - ஹர்ஷ டி சில்வா

ஜெனீவா விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் பிழையான விம்பங்களை ஏற்படுத்துவதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கையில் ஏதும் ஏற்படாதது போல் பூகோள மேற்கு சீன மோதலுக்காக இலங்கையை இவ்வாறு பயன்படுத்தியதான ஓர் தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் விதமாக அரசாங்கம் பேசுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நேற்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவி்ககையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வாக்களித்த நாடுகளை பிராந்திய ரீதியாக சுட்டிக்காட்டி சம்ரதாயமாக இலங்கைக்கு வாக்களிக்கும் நாடுகள்கூட இம்முறை வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டதாக சுட்டிக் காட்டினார். 

ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்காக இதை அரசியல் காலணியாக பயன்படுத்தாமல் இதிலிருந்து மீளுவதற்கு அரசாங்கத்திற்கு பூரண ஆதரவை வழங்கும் எனக் குறிப்பிட்ட அவர் இது தொடர்பாக சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்த நிலைப்பாட்டை மீள ஞாபகப்படுத்தி இதுதான் கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

மனித உரிமைகள் போரவையில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த கடந்த கால ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பானவையாகும். நாட்டின் மனித உரிமை மற்றும் ஜனநாயக ரீதியான பாதுகாப்பின் பொறுப்புக் கூறலின் பக்கம் முன் நிற்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஐக்கியம், இறைமை, அரசியல் சுதந்திரம் மற்றும் ஒற்றையாட்சிக்குள் கூடியளவு அதிகாரப் பரவலாக்கம் அதாவது 13 ஆவது திருத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முன் நிற்ப்போம். 

அதேபோல் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அப்போதைய ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் பான் கீன் மூன் ஆகியோரிடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட உள்ளக பொறிமுறைகளான LLRC மற்றும் பரனகம ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு நாங்கள் பூரன ஒத்துழைப்பு வழங்குவோம். சர்வதேச அங்கீகாரமுள்ள வெளிப்படைத் தன்மையான உள்ளக பெறிமுறையாக அந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் அமைந்துள்ளது.

இந்த அரசாங்கம் LLRC மற்றும் பரனகம ஆணைக்குழுக்களை நடைமுறைப்படுத்தினால் இந்த மனித உரிமைகள் பிரச்சிணைகளிலிருந்து வெளி வரலாம்.

இரானுவம் எந்த ஒரு இனக்குழுவையும் இலக்கு வைத்தோ அல்லது திட்டமிட்டோ தாக்கவில்லை என்றும் இரானுவ அதிகாரிகள் குற்றமிழைத்தவர்கள் போன்றோ LLRC அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆனால் சில தனி நபர்களின் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகள் மோற்கொள்ள ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது இவ்வளவுதான். 

இதை நடைமுறைப்படுத்துவதுதான் எங்களுடைய நிலைப்பாடு. முற்றிலும் இந்த ஆணைக்குழுக்கள் தற்போதைய பிரதமரின் காலத்தில் உருவாக்கப்ட்டவைகளாகும். ஏன் இப்போது பின்வாங்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

LLRC இல் இன்னெரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கருணா அம்மான் 600 பொலிஸ் அதிகாரிகளை திட்டமிட்டு முலேச்சத்தனமாக கொலை செய்த விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றுவரை எந்த நடவடிக்கைகளும் இல்லை. இன்று அவருக்கு அரசியல் நியமனமும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய பெறுப்பற்ற பெறுப்புக் கூறல்கள்களே ஜெனீவா விடயங்களில் பிரதிபலிக்கிறது.

அற்ப அரசிலுக்காக ஜெனீவா விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தி கையாளாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad