சீனி மோசடி மூலம் நிரப்பிய சொந்தப் பைகளை மீண்டும் தேங்காய் எண்னெய் மோசடியாலும் நிரப்ப முற்படுகின்றனர் - கயந்த கருணாதிலக்க - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

சீனி மோசடி மூலம் நிரப்பிய சொந்தப் பைகளை மீண்டும் தேங்காய் எண்னெய் மோசடியாலும் நிரப்ப முற்படுகின்றனர் - கயந்த கருணாதிலக்க

தற்போதைய அரசாங்கம் நாட்டின் நடுத்தர மற்றும் கிராமப்புற வறிய மக்களின் பெருன்பான்மை வாக்குகளால் ஆட்சிக்கு வந்து இன்று அவர்களின் நலன் சார்ந்து செயற்படாமல் குறிப்பிட்ட ஓர் வர்க்கத்தின் நலனை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. நாட்டின் 35% வீத மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 10% உயர் வருமான மக்களிலும் 1.8% பங்கு கொண்ட ஓர் சிறு குழுவே இன்று உயர்ந்த இலாபங்களைப் பெற்று வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (29) எதிரக்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த வர்க்கத்தினரின் நாளாந்த வாழ்விற்கு எந்த குந்தகமும் ஏற்படாது. மஞ்சல் 5000 ரூபா என்றாலும் அந்த விலைக்கு சாதாரணமாகப் பெற்றுக் கொள்வார்கள், உலுந்தும் 1800 ரூபா என்றாலும் பெற்றுக் கொள்வாரகள். வாகனங்களும் எவ்வளவுதான் விலை கூடினாலும் அதையும் பெற்றுக் கொள்வாரகள். ஆனால் நாட்டில் உள்ள ஏனைய நடுத்தர மற்றும் வறிய மக்கள்தான் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆட்சிக்கு கொண்ட வந்த இரண்டு வர்க்கமும் இந்த இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றன.

சமுர்த்திப் பயனாளிகள் வைப்பிலிட்ட பணங்களுக்கு இன்று என்ன நேர்ந்துள்ளது. இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவும் இல்லை. சாதாரன மக்கள் கஷ்டங்களுடன் சேமித்த நிதியை அரசாங்கம் பெறுப்பற்று செயற்படுத்துகிறது. கடந்த வரவு செலவுத் திட்டத்திலும் இவர்களின் வைப்புத் தொகை சார்ந்த நிதி ஒதுக்கப்படவில்லை.

இன்று தேங்காய் எண்ணெய் தொடர்பாக பல கதைகள் பல் ஊடகங்களிலும் பல வித கருத்துக்கள் வெளி வருகின்றன. சந்தையில் நுகர்விற்காக புற்றுநோய் ஏற்படுத்த தக்க தரமற்ற தேங்காய் எண்னெய் பறிமாறப்பட்டுள்ளதாக தேசிய தேங்காய் எண்னெய் உற்ப்பத்தியாளர்கள் தம்புளையில் ஊடக சந்திப்பை நடத்தி கூறியுள்ளனர். 

மக்களுக்கு இது குறித்த அச்சம் உள்ளது. நேற்று (நேற்றுமுன்தினம்) பிரதான பத்திரிகை ஒன்றில் “தேங்காய் எண்னெய் கதை ஓர் பொய்” என்று பிரதான தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. இன்று (நேற்று) அதே பத்திரிகையில் “நாடு பூராகவும் புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்னெய் குறித்த பரிசேதனைகள் ஆரம்பம்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. 

நேற்று திவயின பத்திரிகையும் “தேங்காய் எண்னெய் இறக்குமதியிலும் தோல்வி” என்று தலைப்பிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேற்கோல் காட்டினார்.

இது குறித்து இன்றைய நாட்களில் பல செய்திகள் வந்தவன்னமுள்ளதால் மக்களின் நுகர்வு அச்சத்தைப் போக்க அரசாங்கம் இது குறித்த உன்மைகளை வெளப்படுத்த வேண்டும். மக்களுக்கு இதன் உனமைகள் தெரிவிக்கப்பட வேண்டும்.

சிலரின் சொந்தப் பைகளை நிரப்பும் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்க முடியாது. சீனி மோசடி மூலம் நிரப்பிய சொந்தப் பைகளை மீண்டும் தேங்காய் எண்னெய் மோசடியாலும் நிரப்ப முற்படுகின்றனர்.

இன்று பாடசாலைகள் வழமைக்குத் திரும்பியுள்ளது. பாலர் பாடசாலைகளும் அவ்வாறே. கோவிட் அச்சுறுத்தல் இன்னும் நீங்கிய பாடில்லை என்பதால் பாடசாலை கட்டமைப்பிலுள்ள சகலரினதும் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். 

சில மாணவர்கள் தங்களுடைய நாளாந்த பாவனைக்குரிய முகக் கவசங்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலை பல பிரதேசங்களில் உள்ளது. மக்களின் நிதிகளால் சேமிக்கப்பட்ட கோவிட் அறக்கட்டளையிலுள்ள நிதியை இவற்றிற்கு பயன்படுத்தி பாடாசாலை கட்டமைப்பிலுள்ளவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை பலப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

புத்தாண்டு காலம் நெருங்கி வரும் இவ்வேளை அத்தியவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு சலுகை வழங்குமாறு வேண்டிக்கொண்ட அவர் நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருந்த அத்தியவசியப் பொருட்களின் விலைகளை சுட்டிக் காட்டினார். இவ்வருட புத்தாண்டையும் தொலைக்காட்சியைப் பார்த்த வன்னம் கொண்டாடும் நிலையும் இந்த விலை ஏற்றங்களால் ஏற்படலாம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad