ஆப்கானுக்கு முன்னறிவித்தலின்றி திடீர் விஜயம் மேற்கொண்டார் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

ஆப்கானுக்கு முன்னறிவித்தலின்றி திடீர் விஜயம் மேற்கொண்டார் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்ட்டின் முன்னறிவித்தல் இன்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆப்கானில் ஏஞ்சியுள்ள அனைத்து அமெரிக்க துருப்புகளையும் வாபஸ் பெறும் திட்டத்திற்கு ஒரு சில வாரங்கள் இருக்கும் நிலையிலேயே இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானியை காபுலில் சந்தித்த அவர், போரை முடிவுக்குக் கொண்டுவரும் அழைப்பை விடுத்தார். எனினும் படைகளை வாபஸ் பெறும் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. 

மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தை மூலம் ஆப்கானில் வன்முறைகளை குறைப்பது பற்றியே ஒஸ்ட்டின் அவதானம் செலுத்தியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் தலிபான்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையிலேயே அமெரிக்க துருப்புகளை வாபஸ் பெற உடன்படிக்கை எட்டப்பட்டது.

எனினும் அந்த உடன்படிக்கையின்படி ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தலிபான்கள் உடன்பட்டதை அவர்கள் செயற்படுத்துவது பற்றி கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் படைகளை வாபஸ் பெறுவதற்கான மே 1ஆம் திகதிய காலக்கெடுவில் அதனை செயற்படுத்துவது கடினமான ஒன்றாக இருப்பதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment