250 கிலோ கிராம் எடை கொண்ட சுறா மீன் துடுப்புகள் இலங்கை சுங்கப் பரிவினரால் மீட்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

250 கிலோ கிராம் எடை கொண்ட சுறா மீன் துடுப்புகள் இலங்கை சுங்கப் பரிவினரால் மீட்கப்பட்டது

சட்டவிரோதமான முறையில் ஹொங்கொங்கிற்கு ஏற்றுமதி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தின் சுங்க ஏற்றுமதி பிரிவுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சுறா மீன் துடுப்புகள் இலங்கை சுங்கப் பரிவு அதிகாரிகளினால் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட உலர்ந்த சுறா துடுப்புகளின் மொத்த எடை 250 கிலோ கிராம் என்பதுடன் அவற்றின் பெறுமதி 20 இலட்சம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுறாக்களின் துடுப்புகளின் பங்கினை பெறுவதற்கு 300 க்கும் மேற்பட்ட சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுக் கூறியுள்ளனர்.

இலங்கையின் மீன் வள மற்றும் நீர் வளச் சட்டத்தின் கீழ், 15.06.2017 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு 2023/15 இன் பிரகாரம், இந்த மீன் அல்லது அதன் ஒரு பகுதியை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றுமதி உரிமங்களை முன்கூட்டியே பெற வேண்டும்.

ஒரு கிலோ சுறா துடுப்புகள் 400 அமெரிக்க டெலரையும் விட அதிக விலைக்கு விற்க்கப்படுவதுடன், சீனர்கள் இந்த சுறா துடுப்புகளை ஆடம்பர உணவை தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.

ஏற்றுமதிக்காக சுறா துடுப்புகளின் பங்கை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவந்த நீர்கொழும்பைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தின் பணிப்பாளரிடம் இது தொடர்பில் அறிக்கை பதிவிடவும் சுங்கப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கை சுங்க பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் சுங்க பணிப்பாளர் ஜெனரல், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜிதா ரவிப்ரியாவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment