யாழ். திருநெல்வேலி பொதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை பூட்டு - வியாபாரிகள், பணியாளர்கள் தம்மை சுய தனிமைப்படுத்திக் கொள்ளவும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

யாழ். திருநெல்வேலி பொதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை பூட்டு - வியாபாரிகள், பணியாளர்கள் தம்மை சுய தனிமைப்படுத்திக் கொள்ளவும்

திருநெல்வேலி பொதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

நல்லூர் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியில் உள்ள கடைகளின் வியாபாரிகளும் அடங்குகின்றனர். அதனால் திருநெல்வேலி பொதுச் சந்தை உள்ளிட்ட சந்தைத் தொகுதி முழுமையாக இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.

திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

தமது விவரங்களை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அல்லது வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணி நேர சேவையான 021 2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த ஒத்துழைப்பை வழங்குவதன் ஊடாக தமது உறவினர்களையும் பிரதேசத்தையும் கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாக்க முடியும்” என்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்

No comments:

Post a Comment