யாழ் மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட காணிகள் - மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகான வழிவகை செய்தார் அங்கஜன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

யாழ் மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட காணிகள் - மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகான வழிவகை செய்தார் அங்கஜன்

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலமாக இழுபறியாக இருந்த காணிப் பிரச்சினை குறிப்பாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் (Forest Department), வனஜீவராசிகள் திணைக்களம் (Wildlife Department) ஊடாக பிரகனப்படுத்தப்பட்ட இடங்களாக அடையாளப்படுத்திய இடங்களில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பலமுறை யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத் தொடரில் எடுத்துரைக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (09) வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தலைமையில் அவரது அமைச்சரவை அதிகாரிகள் பிரசன்னத்துடன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், சம்மந்தப்பட்ட பிரதேசங்களின் பிரதேச செயலகர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று. 

அத்துடன், இக்கலந்துரையாடலில் இந்த காணிகள் பிரகடனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தீர்வுக்கு வழிவகை செய்யப்பட்டது.

இதன்பின் ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த அங்கஜன் இராமநாதன் யாழ் மாவட்டத்தில் நீண்ட காலமாக இழுபறியாக இருந்த காணிப் பிரச்சினை குறிப்பாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் (Forest Department), வனஜீவராசிகள் திணைக்களம் (Wildlife Department) ஊடாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களாக அடையாளப்படுத்திய இடங்களில் மக்களுக்கு அவர்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு ஒரு இடைஞ்சலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு பல அபிவிருத்தி குழுக் கூட்டங்களில் இது பேசப்பட்டு அங்கு தீர்மானம் எடுக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்று வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தலைமையில் மற்றும் அவருடைய அமைச்சின் உத்தியோகத்தர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று அவர்களுக்கு ஒவ்வொரு புகைப்படங்களாக அதாவது நெடுந்தீவு, சுண்டிக்குளம், நவக்காடு, சரசாலை போன்ற இடங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்தி இவை ஒவ்வொன்றும் மக்களுடைய இயல்பு வாழ்வுக்கு இடைஞ்சலாக இருப்பதை எடுத்துரைக்கப்பட்டபோது இதனை அவர்கள் ஏற்றுக் கொள்கின்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

இதில் தீர்மானிக்கப்பட்டதானது, குறிப்பாக இன்னும் ஒரு வாரத்தில் எங்களுடைய அரச அதிபர் இந்த பிரதேசங்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான விபரமான ஒரு கோவையை அமைச்சுக்கு அனுப்பி வைப்பார். 

அதேநேரம் அதற்கு பிற்பாடு இரண்டு வாரங்களின் பின்னர் இங்கிருந்து உத்தியோகத்தர்கள் அனைவரும் நேரடியாக அங்கு வந்து சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுடன் இணைந்து நேரடியாக ஒரு கண்காணிப்பு விஜயம் செய்து அதிலிருந்து அந்த விடயத்தை உடனடியாக தீர்வுக்கு கொண்டு வருவதாக எங்களுக்கு வாக்களித்திருக்கிறார் என்றார்.

No comments:

Post a Comment