காங்கோவில் மலை நிறைய தங்கம் - போட்டி போட்டுக் கொண்டு தோண்டி எடுத்து சென்ற மக்கள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

காங்கோவில் மலை நிறைய தங்கம் - போட்டி போட்டுக் கொண்டு தோண்டி எடுத்து சென்ற மக்கள்

காங்கோவில் ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்த செய்தி தீ போல கிராமம் முழுவதும் பரவியது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த செய்தி காட்டுத் தீ போல கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அனைவரும் மண் வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மலை பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மண்ணை தோண்டினர். பின்னர் அதனை பைகளில் போட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்று தண்ணீரில் அலசி தங்கத் தாதுக்களை எடுத்தனர். 

இது தொடர்பான வீடியோவை அகமது அல்கோபரி என்ற பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனிடையே இந்த தகவல் அரசுக்கு தெரிந்தவுடன் மலையில் மண்ணை தோண்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த மலை முழுவதிலும் தங்கத் தாது இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே மலையை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad