தரிசு நிலங்களில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

தரிசு நிலங்களில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தரிசு நிலங்களை பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று (25) ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையில் மொத்தமாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 28,000 ஏக்கர் தரிசு நிலங்களை 320 விவசாய சேவைகள் மத்திய நிலையங்களில் பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தும் திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதன்படி தொம்பேயிலுள்ள விவசாய சேவைகள் பிரிவின் பகுரு ஓயா பிரதேசத்தில் 140 ஏக்கர் வயலில் பயிர் செய்கையை மேற்கொள்வதாகவும் 28 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களில் பயிர் செய்வதற்கு 35,000 மெட்ரிக் தொன் பயிர்ச செய்கைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரிசு நிலங்களும் சுத்தம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25000 வீதம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும்

இதற்கான உரங்கள், தொழில்நுட்பம் மற்றும் இயந்திர வசதிகளை அரசாங்கம் இலவசமாக வழங்கவுள்ளதுடன், ஒவ்வொரு விவசாய சேவைகள் பிரிவிற்கும் 10 ஏக்கர் தரிசு நிலங்கள் பயிரிடுவது கட்டாயப் படுத்தப் பட்டுள்ளது.

அத்துடன் முதற்கட்டமாக 28,000 ஏக்கர் பயிர் செய்கை ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் 22,000 மும், இரண்டாவது கட்டமாக 50,000 ஏக்கர் தரிசு நிலங்களில் விவசாயம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நாட்களில் சமூக வலைத்தளங்களினூடாக அரிசி தட்டுப்பாடொன்று காணப்படுவதாகவும், அரிசியின் விலை உயர்ந்துள்ளதாகவும் பல்வேறு முறைகளில் செய்திகள் வெளியாகின்றன.

இந்தப் போகத்தில் 764,000 ஹெக்டயரில், மெட்ரிக் டொன் 3.2 மில்லியன் நெல் பயிரிடப்பட்டுள்ளது, சிறு போகத்திற்கு 1.8 மில்லியன் பயிரிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2020 ஆம் ஆண்டில் 5 மில்லியன் மெட்ரிக் டொன் நெல்லை உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad