இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கண்டி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் தெங்கு பயிர்ச் செய்கை சபையின் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான ஹிதாயத் சத்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
யகலத்தன்னை முஸ்லீம் மகா வித்தியாலயம் மற்றும் கம்பளை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர் London Metropolitan பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டம் MBA (UK), இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் பட்டப் பின்படிப்பு PG Dip in Marketing (SL) மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் டிப்ளோமா Dip in Marketing (SL) என்பனவற்றை நிறைவு செய்தவர் என்பதும் இலங்கை மற்றும் துபாய் UAE நாடுகளில் சந்தைப் படுத்தல் மற்றும் வணிக முகாமையாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இதற்கான நியமனத்தை ஹிதாயத் சத்தாரிடம் நேற்று (12) வழங்கி வைத்தார்.
ஹிதாயத் சத்தார் கடந்த கால, மற்றும் எதிர்கால அரசியல் செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாக இந்நிகழ்வு பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
No comments:
Post a Comment