ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அரச சேவையைத் தங்கு தடையின்றி நடத்திச் செல்லும் பொருட்டு அரச துறையிலுள்ள அனைத்து உத்தியோகத்தர்களையும் மார்ச் 8ஆம் திகதி முதல் சேவைக்கு அழைக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத் தாபன நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு இந்த சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கொவிட் 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிகழ்ச்சிகளுடன் இணைந்த வகையில் எல்லா அரச சேவைகளையும் தடங்கலின்றி நடத்திச் செல்வதற்காக 08.03.2021 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அரச துறையிலுள்ள அனைத்து உத்தியோகத்தர்களையும் வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
08.03.2021 தொடக்கம் லீவுகள் தொடர்பில் வழமையான ஏற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment