தேங்காய் எண்ணெய் தரப் பரிசோதனை : நால்வரில் ஒருவர் சமர்ப்பித்த மாதிரி தரமற்றது என கண்டறியப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

தேங்காய் எண்ணெய் தரப் பரிசோதனை : நால்வரில் ஒருவர் சமர்ப்பித்த மாதிரி தரமற்றது என கண்டறியப்பட்டது

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் நால்வரில் ஒருவர் சமர்ப்பித்த மாதிரி தரமற்றதென கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் (SLSI) முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த தரமற்ற தேங்காய் எண்ணெயை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியாகும் தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபை சந்தையில் விற்பனையாகும் தேங்காய் எண்ணெயின் தரத்தை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஏனைய மூன்று இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி சித்திகா சேனாரத்ன தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபரால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய், இரண்டு சந்தர்ப்பங்களில் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவை தரமற்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad