முஸ்லிம் எம்.பி.க்கள் தமது பொறுப்பை உணர வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 27, 2021

முஸ்லிம் எம்.பி.க்கள் தமது பொறுப்பை உணர வேண்டும்

முஸ்லிம் சமூகம் இருள்­ம­ய­மான ஓர் எதிர்­கா­லத்தை நோக்கித் தள்ளப்­பட்டு வரு­கி­றது. பெரும்­பான்மைப் பலத்­துடன் பத­விக்கு வந்த அர­சாங்கம் பெரும்­பான்மை மக்­களைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக முஸ்­லிம்­களைக் குறிவைத்­தி­ருப்­பது தெளி­வாகத் தெரி­கி­றது.

கொவிட் 19 ஜனாஸா நல்­ல­டக்க உரி­மையைப் பெற்றுக் கொள்வதற்காக நடாத்­திய போராட்டம் முடி­வுக்கு வந்து நிம்­மதிப் பெரு­மூச்சு விடு­வ­தற்­கி­டையில் மேலும் பல சவால்­களை நாம் எதிர்கொள்ள வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது.

அர­சாங்கம் திடீ­ரென முஸ்­லிம்கள் மீதான பல்­வேறு தடை­களை விதிக்­கவும் சீர்­தி­ருத்­தங்­களை அமுல்­ப­டுத்­தவும் முயற்­சிப்­பதன் காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்பிடப்­பட்­டுள்ள விட­யங்­க­ளே­யாகும்.

இந்த அறிக்­கையின் சிபா­ரி­சுக்­க­மைய, முஸ்லிம் பெண்கள் அணியும் புர்­கா­வைத் ­தடை செய்­வ­தற்­கான முன்­னெ­டுப்­புகள் தீவிரமடைந்துள்­ளன. அதற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சேகர கையொப்பமிட்டுள்ளார். இன்னும் ஓரிரு வாரங்­களில் இது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் கலந்­து­ரை­யாடி அங்­கீ­காரம் பெற்றுக் ­கொள்­ளப்­படும் என அமைச்சர் சரத் வீர­சே­கர தெரிவித்துள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ரணை நடாத்­திய பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு மற்றும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கைகள் புர்கா தடை செய்­யப்­ப­ட­வேண்­டு­மென பரிந்­து­ரைத்­துள்­ளன. இப்­ப­ரிந்­து­ரையை முன்­வைத்­த­வர்­களில் முஸ்லிம் அர­சியல்வாதி­களும் உள்­ளார்கள்’’ எனவும் அமைச்சர் வீரசே­கர வெளி­நாட்டு செய்திச் சேவைக்கு தெரி­வித்­துள்­ள­மையை இங்கு குறிப்­பிட்­டாக வேண்டும். 

அதே போன்று அமைச்­ச­ர­வையில் இருக்கும் ஒரே முஸ்லிம் அமைச்சரான நீதி­ய­மைச்சர் அலி சப்ரி இந்த விட­யத்தில் எதிர்ப்புகளைத் தெரி­விக்­க­வில்லை என்றும் சரத் வீர­சே­கர குறிப்பிட்டுள்ளார்.

மறு­புறம் மத்­ர­சாக்கள் தடை செய்­யப்­படும் என்ற தனது கருத்து தொடர்பில் அமைச்சர் சரத் வீர­சே­கர பாரா­ளு­மன்­றத்தில் விளக்கமளித்­துள்ளார். 

5-16 வயது வரை­யான மாண­வர்­க­ளுக்கு இஸ்லாம் மற்றும் அரபு கற்பிக்கும் மத்­ர­சாக்­களே தடை செய்­யப்­படும் என்றும் 16 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்­கான மத்­ர­சாக்கள் தடை செய்­யப்­ப­டாது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அவ்­வா­றெனில் 5-16 வய­துக்­கி­டைப்­பட்ட மாண­வர்கள் தமது இஸ்லாமிய சம­யத்­தையோ அல்­லது அல்­குர்­ஆ­னையோ கற்க முடியாதா என்ற கேள்வி எழு­கி­றது. குறித்த வயதில் பாட­சாலைக் கல்வியைக் கைவிட்டு இஸ்லாம் மற்றும் அரபு மொழியை மாத்­திரம் கற்­ப­தையோ கற்­பிப்­ப­தையோ ஏற்க முடி­யாது. ஆனால் தமது பாடசாலைக் கல்­வியைத் தொடர்ந்து கொண்டே மார்க்­கத்­தையும் பயி­லு­கின்ற மாண­வர்­களின் மத ரீதி­யான உரி­மையைத் தடை செய்வ­தா­கவே அமைச்சர் சரத் வீர­சே­க­ரவின் புதிய அறி­விப்பு அமைந்­துள்­ளது. இது ஆபத்­தா­ன­தாகும்.

அமைச்­சரின் அண்­மைக்­கால கருத்­துக்­களை நோக்­கும்­போது அவருக்கு முஸ்லிம் சமூகம் குறித்தும் இஸ்­லா­மிய சமயம் குறித்தும் போதிய தெளி­வில்லை என்­பது நன்கு புரி­கி­றது. அவ­ச­ரப்­பட்ட விதமான அவ­ரது அறிக்­கைகள் சர்­வ­தேச ரீதியில் நாட்­டுக்கு அபகீர்த்தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்நிலையில் அமைச்­ச­ருக்கும் ஏனைய அர­சாங்க முக்கியஸ்தர்களுக்கும் புர்கா, மத்­ரசா, முஸ்லிம் தனியார் சட்டம் உள்­ளிட்ட ஏனைய சமய, சமூக விவ­கா­ரங்கள் குறித்து தெளி­வு­களை வழங்க வேண்­டி­யது யார்? நிச்­ச­ய­மாக இந்தப் பொறுப்பு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 19 முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் உரி­ய­தாகும். தமது சமூ­கத்தைப் பற்றி, சமயத்தைப் பற்றி விளக்­க­ம­ளிப்­பதில் ஆளும் கட்சி, எதிர்க்­கட்சி என்ற பேதங்கள் அவ­சி­ய­மில்லை.

துர­திஷ்­ட­வ­ச­மாக, கடந்த மார்ச் 10 ஆம் திக­தியும் நேற்­றுமுன்தினமும் பாரா­ளு­மன்­றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஆணைக்­குழு அறிக்கை விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது மேற்­படி முஸ்லிம் எம்.பி.க்களில் கணி­ச­மானோர் சபையில் கூட இருக்­க­வில்லை என்ற தக­வலை அறியும் போது மிகவும் கவலையா­க­வுள்­ளது.

குறித்த அறிக்­கையில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான பல்­வேறு விடயங்கள் உள்­ள­டங்­கி­யுள்ள நிலையில் அவற்­றுக்கு உரிய தெளிவுகளை வழங்கி அவற்றை ஹன்­சார்டில் பதிய வைக்க வேண்டிய வர­லாற்றுக் கட­மையை இந்த எம்.பி.க்கள் தவறவிட்டுள்ளமை துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். இதற்கும் மேலாக எம்.பி.க்களுக்கு வழங்­கப்­பட்ட குறித்த அறிக்­கையின் பிர­தி­களைக் கூட பல முஸ்லிம் எம்.பி.க்கள் புரட்டி வாசிக்கவில்லை என்பதை அறியும்போது வெட்கப்பட வேண்டியுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment