(எம்.மனோசித்ரா)
பென்டகன் தாக்குதல் தொடர்பில் இரு வாரங்களுக்கு முன்னரே அமெரிக்க புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுக்க முடியாமல் போனது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இவ்வாறான சவால்களுக்கு இலங்கை மாத்திரமின்றி முழு உலகமும் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துருகிரிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறினார்.
அடிப்படைவாதம், தீவிரவாதம், இஸ்லாம் தீவிரவாதம் என்பவை இலங்கை மாத்திரமின்றி முழு உலகமும் முகங்கொடுக்கும் சவாலாகும்.
பாரிய வளமுடைய, தொழிநுட்பத்தில் உயர் மட்டத்திலுள்ள, பலம் பொறுந்திய தனவந்த நாட்டுக்கு செப்டெம்பர் 11 தாக்குதல்களை தவிர்க்க முடியாமல் போனது.
பென்டகனிலுள்ள பாதுகாப்பு தலைமையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும், ஆயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்த பின்லாடனின் தாக்குதல்களை தவிர்க்க முடியாமல் போனது.
பின்லாடனின் தாக்குதல்கள் தொடர்பில் இரு வாரங்களுக்கு முன்னரே அமெரிக்க புலனாய்வு பிரிவிற்கு தகவல்கள் கிடைத்திருந்தன. எனினும் அமெரிக்காவினால் அதனை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக நாம் இவ்வனைத்து சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment