வடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கிய நிலையில் இதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டனர்.
அநுராதபுரம் புதிய க்ரிட் (Grid) உப மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வட மாகாணத்திற்கான மின்சார விநியோகம் இன்றிரவு (08) 7 மணி முதல் தடைப்பட்டது.
இதனைத் தவிர, வாழைச்சேனை, ஹபரணை, பொலன்னறுவை மற்றும் வவுனியா ஆகிய Grid உப மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
இதனால், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மின்சார விநியோகம் தடைப்பட்டதுடன், மீண்டும் இரவு 9 மணியளவில் வழமைக்கு திரும்பியது.
No comments:
Post a Comment