(செ.தேன்மொழி)
களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேல் வீசப்பட்ட தடை செய்யப்பட்ட பொருட்களடங்கிய பொதியை சிறைச்சாலையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேல் இன்று புதன்கிழமை அதிகாலை 4.50 மணியளவில், இனந்தெரியாத நபரொருவரினால் பொதியொன்று வீசப்படுவதை அவதானித்துள்ள சிறைச்சாலை அதிகாரிகள் அந்த பொதியை கைப்பற்றியுள்ளனர்.
புற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த பொதியிலிருந்து, தொலைபேசி மற்றும் 8 புகையிலை துண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த தடை செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
களுத்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment