வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொவிட்-19 தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் சுகவீனம் காரணமாக நேற்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அன்ரிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
அவருக்கு முன்னெடுக்க்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment