மட்டகளப்பிலுள்ள நான்கு பிரதேச செயலாளர்களுடன் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக நசீர் அஹமட் கலந்துரையாடல் - News View

Breaking

Post Top Ad

Monday, March 8, 2021

மட்டகளப்பிலுள்ள நான்கு பிரதேச செயலாளர்களுடன் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக நசீர் அஹமட் கலந்துரையாடல்

நேற்று 08.03.2021 மட்டகளப்பு மாவட்டங்களில் உள்ள கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று மத்தி, ஏறாவூர் நகர மற்றும் காத்தான்குடி இந்நான்கு பிரதேச செயலகங்களின் செயலாளர்களுக்கிடையில் பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சம்பந்தப்பட்ட விடயங்களும், டெங்கு ஒழிப்பு சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.

இதில் வீதி அபிவிருத்தி, பாலம் (Bridge) தொடர்பான அபிவிருத்தி / புனர்நிர்மாணம் சம்மந்தப்பட்ட திட்டம், சமுர்த்தி பயனாளிகள் / சமுர்த்தி தொடர்பான திட்டங்கள், பிரதேச ரீதியான அபிவிருத்தி திட்டம் என்பன உள்ளடக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கம் பிரதேச அபிவிருத்தி குழுக்கலந்துரையாடல் ஊடகவே சகல விதமான பிரதேச அபிவிருத்திகளை மேற்கொள்ளப்பட திட்டமிட்டதாக இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அரசாங்கத்தினால் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர்களான எஸ்.எச்.ஏ. முஸம்மில் (கோரளைப்பற்று மத்தி), வீ.தவராஜா (கோரளைப்பற்று மேற்கு), நிஹாரா மௌஜூத் (ஏறாவூர் நகர்), உதயசிறிதர் (காத்தான்குடி), ஏறாவூர் நகர சபை உறுப்பினர் சரூஜ் மற்றும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் தஸ்லிம் ஆகியோரும் கலந்து கொடண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad