20 மில்லியன் ரூபா பெறுமதியான 15,200 லீற்றர் எத்தனோல் கொள்கலன் பறிமுதல் - News View

Breaking

Post Top Ad

Monday, March 8, 2021

20 மில்லியன் ரூபா பெறுமதியான 15,200 லீற்றர் எத்தனோல் கொள்கலன் பறிமுதல்

சுங்க மத்திய புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்த அதிகாரிகள் நேற்று 20 மில்லியன் ரூபா பெறுமதியான 15,200 லீற்றர் எத்தனோல் கொண்ட ஒரு கொள்கலனை பறிமுதல் செய்ததாக சுங்கப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் விஜிதா ரவிப்ரியா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள ஒரு இறக்குமதி நிறுவனத்தின் பெயரில் 2020 ஆகஸ்ட் 9 அன்று சிங்கப்பூரிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு இந்த கொள்கலன் கொண்டு வரப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

2016 முதல் வணிகத்தில் ஈடுபடாத ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தின் பெயரில் இந்த சரக்குகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

சுங்க அதிகாரிகள் சரக்குகளை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு துறைமுகத்திலிருந்து கொள்கலனை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கூறி கடிதங்களை அனுப்பியிருந்தனர்.

எனினும் அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை. அதனையடுத்தே கொள்கலன்களை திறந்து அதனுள் அடைக்கப்பட்டுள்ள திரவியங்களை ஆய்வு செய்தனர்.

இந்த கொள்கலனில் 12,220 கிலோ கிராம் தொழில்துறை இரசாயனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும், சுங்க அதிகாரிகளின் ஆய்வக பரிசோதனையில் இந்த கொள்கலனில் 76 பீப்பாய்களில் அடைக்கப்பட்ட 15,200 எதனோல் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை சுங்கத்தின் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எத்தனால் கொண்ட கொள்கலனின் உண்மையான உரிமையாளர்களைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இலங்கைக்கு எத்தனால் இறக்குமதி செய்வது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஒரு பொதுக் கொள்கையாகவும், கலால் சட்டத்தின் கீழும் தடை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad