ஜப்பான் கடலுக்குள் ஏவுகணைகளை ஏவி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது வட கொரியா - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

ஜப்பான் கடலுக்குள் ஏவுகணைகளை ஏவி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது வட கொரியா

வட கொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ஒரு ஜோடி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளது.

வட கொரியா தனது கிழக்கு கடற்பரப்பில் இரண்டு சந்தேகத்திற்குரிய ஏவுகணைகளை இன்று ஏவியது என்று ஜப்பானிய பிரதமர் சுகா யோஷிஹைட் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின் கீழ் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பதற்றத்தைத் தூண்டுவதாகவும், வட கொரியா கொள்கையை இறுதி செய்யும் பைடன் நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனை வட கொரியாவின் சட்டவிரோத ஆயுதத் திட்டம் அதன் அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை எடுத்துக் காட்டுகிறது என்று அமெரிக்க இராணுவத்தின் இந்தோ - பசிபிக் கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேரேநம் நிலைமையைக் கண்காணித்து நட்பு நாடுகளுடன் இது தொடர்பில் ஆலோசனை நடத்துவதாகவும் இந்தோ - பசிபிக் கட்டளை கூறியது.

ஜப்பான் சீனாவில் உள்ள தனது தூதரகம் மூலம் முறையான போராட்டத்தை நடத்தியது மற்றும் இந்த சோதனை பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகக் கூறியது, அதேநேரத்தில் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.

ஜப்பானின் கடலோர காவல்படை அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்குப் பின்னர் முதல் ஏவுகணை ஏவப்பட்டதாக கூறியது. இது சுமார் 420 கி.மீ (260 மைல்) பறந்தது.

அதன் பிறகு இரண்டாவது ஏவுகணை 20 நிமிடங்கள் பின்னர் ஏவப்பட்டதாகவும், அது சுமார் 430 கிமீ (270 மைல்) பறந்தது என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad