ஜனாதிபதி ஊடகங்களை அச்சுறுத்தவில்லை - கெஹெலிய ரம்புக்வெல்ல - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

ஜனாதிபதி ஊடகங்களை அச்சுறுத்தவில்லை - கெஹெலிய ரம்புக்வெல்ல

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை. ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பிலேயே தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பிலேயே அண்மையில் ஜனாதிபதி கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனை ஊடகவியலாளர்களுக்கோ அல்லது அதனுடன் தொடர்புடையவர்களுக்கோ அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கருத முடியாது.

ஜனாதிபதியால் கூறப்பட்ட கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன. எனவே இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வீணாகக் குழப்பமடையத் தேவையில்லை.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கழுவேவா தனிப்பட்ட காரணத்திற்காகவே பதவி விலகியுள்ளார். தொழிற்துறையில் அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு கிடைக்கப் பெறும் போது அதற்கு நாம் இடமளித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad